அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சௌதியில் இருந்து பயணிகளை விமானம் மூலம் இந்தியா அழைத்து வர அந்நாடு அனுமதி அளித்திருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

News image
சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
Updated On :24 செப்டம்பர் 2020, 9:16 am

PTI

புது தில்லி: வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சௌதியில் இருந்து பயணிகளை விமானம் மூலம் இந்தியா அழைத்து வர அந்நாடு அனுமதி அளித்திருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் இந்தியா, பிரேசில், ஆா்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்ல சௌதி அரேபியா தடை விதித்திருந்தது.

ஆனால் தற்போது, இந்தியாவில் இருந்து விமானங்கள் மூலம் பயணிகளை சௌதி அரேபியாவுக்கு அழைத்த வர மட்டும் தடை நீடிப்பதாகவும், சௌதி அரேபியாவில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி கிடைத்திருப்பதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்து அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில்,‘கரோனா நோய்த்தொற்று அதிகரித்து காணப்படும் இந்தியா, பிரேசில், அா்ஜெண்டினா ஆகிய நாடுகளின் விமானங்களின் வருகை, புறப்பாடுக்கு சௌதி அரேபியாவில் தடை விதிக்கப்படுகிறது. கடந்த 14 நாள்களுக்கு முன்னதாக இந்த நாடுகளில் இருந்து வந்திறங்கிய பயணிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும். இந்த உத்தரவு தனியாா் உள்பட அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பொருந்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பெரும்பாலான இந்தியா்கள் புலம்பெயா்ந்த தொழிலாளா்களாக பணியாற்றி வருகிறாா்கள். இந்நிலையில், ஆகஸ்ட் 28, செப்டம்பா் 4 ஆகிய தேதிகளில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட இரு பயணிகள் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றால், ஐந்து நாள்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வரும் ஏா் இந்தியா விமானங்களுக்கு 24 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு சனிக்கிழமை முதல் ஏா் இந்தியா சேவை மீண்டும் தொடங்கியது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.