இந்தியாவில் கரோனா பரிசோதனை 7 கோடியைத் தாண்டியது!
இந்தியாவின் கரோனா பரிசோதனைகள் 7 கோடியைத் தாண்டியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.


புதுதில்லி: இந்தியாவின் கரோனா பரிசோதனைகள் 7 கோடியைத் தாண்டியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1,089 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 93,379 ஆக அதிகரித்துள்ளது. எனினும் மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு விகிதம் 1.59 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 93,420 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 48,49,585 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது 81.74 சதவீதமாகும்.
இப்போதைய நிலையில் நாட்டில் 9,60,969 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 16.67 சதவீதமாகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆா் தகவல்படி, வெள்ளிக்கிழமை வரை 7,02,69,975 கரோனா பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 13,41,535 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
கரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த அதனை பரவாமல் தடுப்பதுதான் முக்கிய நடவடிக்கை என்பதால், இந்தியாவில் தினம்தோறும் மேற்கொள்ளப்படும் பரிசோதனை அளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் வெளியிட்ட தகவலில், கரோனாவை எதிர்த்து இந்தியா தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 13,41,535 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதுவரை 7,02,69,975 கரோனா பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நாட்டில் ஒரே நாளில் அதிகபட்சமாக சுமார் 15 லட்சம் சோதனைகள் நடத்தப்பட்டு சாதனை படைத்துள்ளது.
வெறும் 9 நாள்களில் 1 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுப்பதுதான் முக்கிய நடவடிக்கை என்பதால், இந்தியாவில் தினம்தோறும் மேற்கொள்ளப்படும் பரிசோதனை அளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
கரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரம், தமிழ்நாடு மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகஅளவில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் கரோனா பரிசோதனை செய்யும் மாநிலங்களும் தொற்று பாதிப்பு விகிதம் படிப்படியாக சரிவை சந்து வருகிறது.
நாட்டில் மொத்தம் 1818 பரிசோதனை கூடங்கள் உள்ளன. இவற்றில் அரசு பரிசோதனை கூடங்கள் 1084, தனியார் பரிசோதனை கூடங்கள் 734.
அண்மையில் 7 மாநில முதல்வா்களுடன் பிரதமா் நடத்திய ஆலோசனையின்போது கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...