புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மேகாலயா: 'மழை சேதங்கள் விரைவில் சரிசெய்யப்படும்'

மழையால் ஏற்பட்ட சேதங்கள் விரைவில் சரிசெய்யப்படும் என்று மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா உறுதியளித்துள்ளார்.

News image

மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா

Updated On :26 செப்டம்பர் 2020, 6:03 am

DIN

மழையால் ஏற்பட்ட சேதங்கள் விரைவில் சரிசெய்யப்படும் என்று மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா உறுதியளித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் சேதமடைந்துள்ளன. மாநிலத்தில் ஒருசில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய அம்மாநில முதல்வர் கான்ராட் சங்மா, மேகாலயாவில் தொடர் மழையால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன.

வெள்ளப்பெருக்கிலும், நிலச்சரிவிலும் உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. மழையால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை குறைக்க போதிய முயற்சிகளை எடுத்து வருகிறோம். மேகாலயாவில் விரைவில் இயல்புநிலை திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

இதனிடையே மேகாலயாவில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.