தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாரத ரத்னா : ப.சிதம்பரம் வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்குத் தகுதியானவர் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

News image
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாரத ரத்னா : ப.சிதம்பரம் வலியுறுத்தல்
Updated On :26 செப்டம்பர் 2020, 11:16 am

DIN

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்குத் தகுதியானவர் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இரண்டு முறை நாட்டின் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் இன்று தனது 88வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மன்மோகன்சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் தனது சுட்டுரைப்பதிவில், “மொத்த நாடும் அவரின் வாழ்வு மற்றும் சேவைக்காக பெருமைப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு இளைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி” எனக் குறிப்பிட்டு தனது வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ளார்.

மேலும்,  “பொதுவாழ்வில் உள்ள ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றால் மன்மோகன் சிங் சந்தேகமில்லாமல் அதனைப் பெறத் தகுதியானவர்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.