25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஜம்மு-காஷ்மீர்: 4 தீவிரவாதிகள் மீது குற்றப்பத்திரிகைத் தாக்கல்

ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பிடிபட்ட 4 தீவிரவாதிகள் மற்றும் லஷ்கர்- இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த அவர்களது கூட்டாளிகள் 3 பேர் மீது காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல்

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:28 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பிடிபட்ட 4 தீவிரவாதிகள் மற்றும் லஷ்கர்- இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த அவர்களது கூட்டாளிகள் 3 பேர் மீது காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

ஹந்த்வாரா பகுதியில் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் நான்கு தீவிரவாதிகளை இந்திய ராணுவம் மற்றும் மத்திய பாதுகாப்புப்படை உதவியுடன் காவல்துறை கைது செய்தது. 4 தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக அவர்களது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், இந்திய ஆயுதச் சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.