ஸ்ரீநகரில் காவல்துறை சார்பில் கிரிக்கெட் போட்டி
ஜம்மு-காஷ்மீரில் காவல்துறை சார்பில் கிரிக்கெட் போட்டி தொங்கி நடைபெற்று வருகிறது.


ஜம்மு-காஷ்மீரில் காவல்துறை சார்பில் கிரிக்கெட் போட்டி தொங்கி நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் வகையிலும், விளையாட்டில் அவர்களது ஆர்வத்தை தூண்டும் வகையிலும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் காவல்துறையினர் சார்பில் கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டுள்ளது. போலீஸ் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் இந்த போட்டியில் ஏராளமான உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில், கரோனா காரணமாக முழுவதுமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் கரோனா பெருந்தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது உற்சாகம் அளிப்பதாகவும், இதுபோன்ற போட்டிகள் அவசியம் என்றும் என்று உள்ளூர் கிரிக்கெட் வீரர் அமீர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் விளையாடுவதாகவும், இதுபோன்ற போட்டிகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும். 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த கிரிக்கெட் தொடருக்கான அனைத்து பொறுப்பையும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...