புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 773 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கரோனா பாதிப்பு 5,194 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழப்பு 149 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வநத 45 வயது நபர் மரணம் அடைந்ததை அடுத்து தமிழகத்தில் மட்டும் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
பல்வே மாநிலங்களில் இருந்து, ஊரடங்கை நீட்டிக்குமாறு பரிந்துரை வந்திருப்பதாகவும், அதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கை ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகும் நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
புது தில்லியில் 51 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு மொத்த எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. இந்த 51 பேரில் 35 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதும், 4 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்
இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


