நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 549 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 5,734 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 166 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 473 பேர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
பிபிஇ எனும் பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் போதுமான அளவு உள்ளது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான பொருட்களை வழங்கப்பட்டு வருகிறது.
ரயில்வே 3,250 பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவசரத் தேவை இன்னொரு எஸ்ஐஆர்!

ஜனநாயகப் போரில் தமிழ்நாடு வெல்லும்: கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்

மருத்துவம் மக்களின் நம்பிக்கை: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீதம் வாக்குப்பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


