தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்தியாவில் கரோனா பாதிப்பு 8,447; பலி 273 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,447 ஆகவும் பலி எண்ணிக்கை 273 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :12 ஏப்ரல் 2020, 1:16 pm

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,447 ஆகவும் பலி எண்ணிக்கை 273 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 765 ஆக உயர்ந்துள்ளது. 

மாநிலங்களைப் பொருத்தவரையில் கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 208 ஆக இருக்கிறது.

தொடர்ந்து இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1075. மூன்றாவதாக தில்லியில் 1069 பேரும், நான்காவதாக ராஜஸ்தானில் 700 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.