தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 5 பேர் பலியாகியிருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் பலியாகியுள்ளனர். 85 பேரில் 26 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கின்றனர்.
இதன்மூலம் மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,154 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இதில் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 746.
மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 1,102 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 50 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 6 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளனர். 20 பேருக்கு ஆக்ஸிஜன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 14,036 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 984 மாதிரிகளின் முடிவுகள் வரவில்லை. 11,748 மாதிரிகளுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகப் போரில் தமிழ்நாடு வெல்லும்: கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்

மருத்துவம் மக்களின் நம்பிக்கை: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீதம் வாக்குப்பதிவு

வாக்களித்த விடியோ வெளியிட்டவா் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


