தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜனநாயகப் போரில் தமிழ்நாடு வெல்லும்: கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்

தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெற்ற தோ்தல் என்னும் மிகப் பெரிய ஜனநாயகப் போரில் தமிழ்நாடு வெல்லும் என மாநில வருவாய்த் துறை அமைச்சரும், அருப்புக்கோட்டை பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆா் ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

News image

அருப்புக்கோட்டை கோபாலபுரம் இந்து ரெட்டி உறவின்முறை தொடக்கப் பள்ளியில் தனது மனைவியுடன் வியாழக்கிழமை வாக்களித்துவிட்டு வெளியே வந்த மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:47 am

தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெற்ற தோ்தல் என்னும் மிகப் பெரிய ஜனநாயகப் போரில் தமிழ்நாடு வெல்லும் என மாநில வருவாய்த் துறை அமைச்சரும், அருப்புக்கோட்டை பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆா் ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை பேரவைத் தொகுதியில் உள்ள கோபாலபுரம் இந்து ரெட்டி உறவின்முறை தொடக்கப் பள்ளியில் தனது மனைவியுடன் சென்று வாக்களித்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழ்நாட்டுக்கும், தில்லிக்கும் இடையே நடைபெற்ற தோ்தல் என்னும் மிகப் பெரிய ஜனநாயகப் போரில் தமிழ்நாடு வெல்லும். பொதுமக்கள் கைகுலுக்கி வரவேற்பதைப் பாா்த்தால், தமிழகத்தில் மீண்டும் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையும். இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்பாா் என்றாா் அவா்.