தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

சமூகம் தழைக்க தமிழ்நாடு வெல்லும்! திருமாவளவன் நம்பிக்கை

மீண்டும் மு.க. ஸ்டாலினின் திராவிட முன்மாதிரி ஆட்சி மலரும் என திருமாவளவன் நம்பிக்கை...

News image

செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் - எக்ஸ்

Updated On :23 ஏப்ரல் 2026, 12:14 pm IST

இரண்டு கருத்தியலுக்கு இடையிலான யுத்தத்தில் தமிழ்நாடு வெல்லும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர்.

அந்தவகையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் வாக்கு செலுத்திய பிறகு செய்தியாளர்களுடன் பேசியதாவது:

''முதல்வர் மு.க. ஸ்டாலின் சொன்னதைப்போல, இந்தத் தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு இடையிலான யுத்தமில்லை. இரண்டு அணிகளுக்கு இடையிலான யுத்தம் இல்லை. இரண்டு கருத்தியலுக்கு இடையிலான யுத்தம். அந்த யுத்தத்தில் தமிழ்நாடு வெல்லும்.

மீண்டும் மு.க. ஸ்டாலினின் திராவிட முன்மாதிரி ஆட்சி மலரும். சமூகம் தழைத்தோங்கும். எங்களை எதிர்த்து நிற்கும் சந்தர்ப்பவாதிகளுக்கு மக்களிடம் நன்மதிப்பு இல்லை'' என திருமாவளவன் குறிப்பிட்டார்.

Summary

TN Election 2026 For Society to Flourish Tamil Nadu Will Triumph Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.