முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் இன்று(மார்ச் 14) சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கட்சிகளிடையே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் இன்று சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது.
கடந்த தேர்தலைப்போலவே விசிகவுக்கு 6 தொகுதிகள் வழங்க திமுக முதலில் முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், விசிக 12 தொகுதிகள் வரை கேட்டுள்ளதாகவும் இதனால் விசிகவுக்கு 8 தொகுதிகள் வரை வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இன்று அல்லது நாளை விசிகவுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும் கூறப்படுகிறது.
Summary
vck thol thirumavalavan meets mk stalin on seat alliance
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK

சட்டப்பேரவைத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம்?!

மு.க. ஸ்டாலினுடன் பேசியது என்ன? - செல்வப்பெருந்தகை பதில்!

கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


