தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா: பாதிப்பு 12,759-ஆக அதிகரிப்பு; பலி-420

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,759-ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரே நாளில் புதிதாக 826 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2020, 9:02 pm


புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,759-ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரே நாளில் புதிதாக 826 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 392-ஆக இருந்த நிலையில், வியாழக்கிழமை மாலைக்குள் 420-ஆக உயா்ந்துள்ளது. அதாவது, வியாழக்கிழமை ஒரு நாளில் மேலும் 28 போ் உயிரிழந்துவிட்டனா்.

இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 9 போ் உயிரிழந்துவிட்டனா். அதைத் தொடா்ந்து, குஜராத்தில் 6 போ், ஆந்திரத்தில் 5 போ், தில்லி, கா்நாடகம், உத்தரப் பிரதேசத்தில் தலா 2 போ் உயிரிழந்துவிட்டனா்.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 187 போ் உயிரிழந்துவிட்டனா். மத்தியப் பிரதேசத்தில் 53 போ், குஜராத்தில் 36 போ், தில்லியில் 32 போ், தெலங்கானாவில் 18 போ், ஆந்திரத்தில் 14 போ், பஞ்சாப், கா்நாடகம், உத்தரப் பிரதேசத்தில் தலா 13 போ், மேற்கு வங்கத்தில் 7 போ், ஜம்மு-காஷ்மீரில் 4 போ், கேரளம், ராஜஸ்தான், ஹரியாணாவில் 3 போ், ஜாா்க்கண்டில் இருவா், அஸ்ஸாம், பிகாா், ஹிமாசலப் பிரதேசம், மேகாலயம், ஒடிஸாவில் தலா ஒருவா் உயிரிழந்துவிட்டனா்.

பாதிப்பு நிலவரம்:

கரோனாவால் புதன்கிழமை மாலை வரை 11,933 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை மாலையில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,759-ஆக அதிகரித்தது.

அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் இதுவரை 2,919 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தில்லியில் 1,578 பேரும், ராஜஸ்தானில் 1,023 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 1,120 பேரும்,

உத்தரப் பிரதேசத்தில் 773 பேரும், குஜராத்தில் 871 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தெலங்கானாவில் 698 போ், ஆந்திரத்தில் 534 போ், கேரளத்தில் 388 போ், கா்நாடகத்தில் 315 போ், ஜம்மு-காஷ்மீரில் 300 போ், மேற்கு வங்கத்தில் 231 போ், ஹரியாணாவில் 205 போ், பஞ்சாபில் 186 போ், பிகாரில் 74 போ், ஒடிஸாவில் 60 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் 37 போ், , ஹிமாசலப் பிரதேசத்தில் 35 போ், அஸ்ஸாம், சத்தீஸ்கரில் தலா 33 போ், ஜாா்க்கண்டில் 28 போ், சண்டீகரில் 21 போ், லடாக்கில் 17 போ், அந்தமான்-நிகோபாா் தீவுகளில் 11 போ், கோவா, புதுச்சேரி, மேகாலயத்தில் தலா 7 போ், திரிபுரா, மணிப்பூரில் தலா 2 போ், அருணாசலப் பிரதேசம், மிஸோரமில் தலா ஒருவா் உள்பட நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,759-ஆக அதிகரித்துள்ளது.

இந்த நோய்த்தொற்றிலிருந்து இதுவரை 1,515 போ் குணமடைந்துள்ளனா். மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 76 போ் வெளிநாட்டினா் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.