தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கரோனா

மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2020, 11:48 am

மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் 167 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், அதில் 53 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் சிவசேனை கட்சி நிர்வாகியும், பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் சுகாதாரக்குழு உறுப்பினருமான அமே கோல் தகவல் தெரிவித்தார். 

53 பத்திரிகையாளர்களில் நிருபர்கள் மற்றும் கேமராமேன்கள் பலர் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 2,700 க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,203. மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 223. மேலும், 507 பேர் குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.