தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்ட 80% பேருக்கு அறிகுறிகள் இல்லை: ஐ.சி.எம்.ஆர். தகவல்

இந்தியாவில் 80% பேருக்கு அறிகுறிகள் இன்றி கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :20 ஏப்ரல் 2020, 6:56 am

இந்தியாவில் 80% பேருக்கு அறிகுறிகள் இன்றி கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,265 ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 543 ஆகவும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் கரோனா அறிகுறிகள் இல்லாமல் இருக்கின்றனர் என்றும் இது மிகவும் கவலைக்குரியது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளதாக தங்கவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக, மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 70 முதல் 75 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். அதேபோன்று, தில்லியில் நேற்று கரோனா உறுதியான 186 பேருக்கும் கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.