புவனேஸ்வர்: கரோனா பாதித்து உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
மருத்துவர்கள் முதல், மருத்துவப் பணியாளர்கள் எவர் ஒருவரும், பணியின் போது கரோனா தொற்று பாதித்து உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், அவர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளாகப் போற்றப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
தன்னலம் கருதாமல் கரோனாவுக்கு எதிரானப் போரில் முன்னின்றுப் போராடும் மருத்துவப் பணியாளர்களுக்கு என சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படும்.
மேலும், கரோனா பாதித்து உயிரிழக்கும் அனைத்து அரசு மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்துக்கு அவர்கள் ஓய்வு பெறும் காலம் வரை முழு ஊதியம் வழங்கப்படும்.
நாட்டு மக்களும், கரோனாவுக்கு எதிரான போரில் முன்னின்று போராடும் மருத்துவப் பணியாளர்களுக்கு தங்களது ஆதரவையும், நன்றியையும் தெரிவிக்க வேண்டும்.
அதே சமயம், மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொதுமக்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களுக்கு எதிரான நடவடிக்கை மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கையாகக் கருதப்படும் என்றும் நவீன் பட்நாயக் எச்சரித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவின் வரலாற்று வெற்றியை முகேஷ் சௌதரிக்குச் சமர்ப்பித்த கேப்டன் ருதுராஜ்!

மூன்றாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை: வெள்ளி?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் தொடக்கம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


