தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஊடகவியலாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

ஊடகவியலாளர்கள் பணியில் ஈடுபடும் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2020, 7:41 am

ஊடகவியலாளர்கள் பணியில் ஈடுபடும் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதில் இந்தியா முழுவதும் பத்திரிக்கையாளர்கள் 70க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மும்பையில் 53 பேருக்கும், சென்னையில் 27 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தந்த மாநிலங்களில் ஊடகவியலாளர்களுக்கு கரோனா சிறப்பு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 'ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கும்பொருட்டு வெளியே செல்கின்றனர். நிருபர்கள் கேமராமேன் புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்டோர் வெளியில் பணிக்குச் செல்லும்போது கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று அச்சு மற்றும் மின்னணு ஊடகத்தில் பணியாற்றும் அலுவல ஊழியர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நிறுவனமும் இதுகுறித்து ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.