மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வைகை அணையிலிருந்து ஆற்றில் விநாடிக்கு 500 கன அடி வீதம் 6 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான சித்திரைத் திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், அழகரின் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், மதுரையில் கூடுவார்கள்.
இந்த நிலையில், கள்ளழகர் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வருகிற 30-ஆம் தேதி கள்ளழகர் எதிர்சேவை நிகழ்வும், மே 1-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக, வெள்ளிக்கிழமை(ஏப். 24) முதல் 6 நாள்களுக்கு வைகை அணையிருந்து 500 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதால் தேனி, மதுரை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Summary
Water has been released from the Vaigai Dam for the festival in Madurai, during which Lord Kallazhagar enters the Vaigai River.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்!

வைகை ஆற்றில் ஆகாயத் தாமரைகளை அகற்றி சீரமைக்கக் கோரிக்கை

அழகா் கோயிலிலிருந்து மறுசீராக அனுப்பிய பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிப்பு

மதுரை கள்ளழகர் எழுந்தருளல்! அநாகரிக செயல்களில் ஈடுபடுவோர் உடனடி கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




