தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நாக்பூரில் கரோனா பாதிப்பு 100 ஐ எட்டியது

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கரோனா பாதிப்பு 100 ஐ எட்டியுள்ளதாக அம்மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார். 

News image

கோப்புப்படம்

Updated On :24 ஏப்ரல் 2020, 11:00 am

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கரோனா பாதிப்பு 100 ஐ எட்டியுள்ளதாக அம்மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார். 

நாட்டிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரே நாளில் புதிதாக 778 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 6430-ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றுக்கு 840 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 283 பேர் பலியாகியுள்ளனர். 

இதில், 70%க்கும் அதிகமான பாதிப்புகள் மும்பையில் உள்ளன. கடந்த சில தினங்களாக நாக்பூரிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாக்பூரில் வெள்ளிக்கிழமை இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து இங்கு மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 98 லிருந்து 100 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா உறுதியான இரண்டு நோயாளிகளும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களின் சோதனை முடிவுகள் இன்று வந்ததாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். நாக்பூரில் இதுவரை, 15 நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நாக்பூரில் கரோனா தடுப்பு நடவடிகைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.