தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லியில் ஊடகவியலாளர்கள் 529 பேரில் 3 பேருக்கு கரோனா உறுதி: கேஜரிவால்

தில்லியில் இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் 529 பேரில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த்கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :29 ஏப்ரல் 2020, 10:07 am

தில்லியில் இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்  529 பேரில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

தலைநகர் தில்லியில் 3,314 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 1,078 பேர் குணமடைந்துள்ளனர். முன்னதாக, நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஊடகவியலாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, தில்லியில் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் என முதல்வர் கேஜரிவால் தெரிவித்திருந்தார். 

அதன்படி, பரிசோதனை செய்யப்பட்ட 529 பேரில் 3 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், அவர்கள் மூவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பணி மிகவும் முக்கியமானது என்றும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.