அயோத்தி அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது: உமா பாரதி

அயோத்தி அனைவரையும் ஒன்றிணைத்துள்ளதாக பாஜக தேசிய துணைத் தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார். 
உமா பாரதி
உமா பாரதி

அயோத்தி அனைவரையும் ஒன்றிணைத்துள்ளதாக பாஜக தேசிய துணைத் தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார். 

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி அயோத்தி சென்றுள்ளார். 

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையை அடுத்து அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அதேநேரத்தில் கரோனா பரவல் காரணமாக தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பாஜக தேசிய துணைத் தலைவர் உமா பாரதி, அயோத்தி அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது. இனி இந்தியா தலையை உயர்த்தி, இங்கு எந்தவிதமான பாகுபாடும் இல்லை என்று பெருமையுடன் உலகிற்கு எடுத்துச் சொல்ல முடியும். ராமர் மீதுள்ள நம்பிக்கையால்தான் நான் இருக்கிறேன்' என்று கூறியுள்ளார். 

முன்னதாக, ராமர் கோயில் அறக்கட்டளையில் இருந்து அழைப்பு வந்த நிலையிலும், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்தபிறகே தான் செல்வதாக உமா பாரதி கூறியிருந்தார். கரோனா தொற்றுப் பரவல் காரணமாகவே தான் இந்த நிகழ்ச்சியை தவிர்த்திருப்பதாகவும் கூறினார். 

பிரதமர் மோடியுடன் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோரும் ராம ஜென்ம பூமி இடத்துக்கு சென்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com