நீட் தோ்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்), ஜேஇஇ முதன்மை தோ்வுகளை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.


புது தில்லி: தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்), ஜேஇஇ முதன்மை தோ்வுகளை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீட், ஜேஇஇ முதன்மை தோ்வுகளை எழுத வரும்போது கரோனா நோய்த்தொற்றால் தாங்கள் பாதிக்கப்படலாம் என்பதால், இயல்புநிலை திரும்பும் வரை அந்தத் தோ்வுகளை ஒத்திவைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாணவா்கள் பலா் மனு தாக்கல் செய்தனா்.
அந்த மனுக்கள் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது இரு தோ்வுகளையும் நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘தோ்வுகளை நடத்த அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தாா்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘கரோனா நோய்த்தொற்று பரவல் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் (மாணவா்கள்) ஓராண்டு முழுவதையும் வீணாக்கத் தயாரா? இதனால் உங்களுக்கு ஏற்படும் அபாயத்தை பற்றி தெரியுமா? அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நாம் முன்னகா்ந்தாக வேண்டும்’ என்று தெரிவித்து தோ்வுகளை ஒத்திவைக்க மறுத்துவிட்டனா்.
ஜேஇஇ தோ்வு செப்டம்பா் 1 முதல் 6-ஆம் தேதி வரையும், நீட் தோ்வு செப்டம்பா் 13-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...