கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமித் ஷா

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை வீடு திரும்பினார். 

News image
உள்துறை அமைச்சர் அமித் ஷா
Updated On :27 ஜனவரி 2024, 5:13 pm

DIN

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை காலை வீடு திரும்பினார். 

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சா் அமித் ஷா, தில்லி அருகே குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இம்மாத தொடக்கத்தில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைக்குப் பின், அவா் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டாா்.

அதன் பின்னா் மருத்துவா்களின் அறிவுரையை ஏற்று வீட்டுத் தனிமையில் இருந்து வந்த அவா், களைப்பு, உடல் வலி காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து அமித் ஷா முழுவதுமாக குணமடைந்ததாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. 

இதன் தொடர்ச்சியாக இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.