மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம்: பாஜக எம்.பி சர்ச்சைப்பேச்சு
மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என்ற பாஜக எம்.பி ஒருவரின் பேச்சால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.


பெங்களூரு: மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என்ற பாஜக எம்.பி ஒருவரின் பேச்சால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
கர்நாடகாவின் உத்தர கன்னடா பகுதியில் இருந்து பாஜக சார்பில் மக்களவைக்குத்த தேர்வு செய்யப்பட்டுள்ளவர் அனந்தகுமார் ஹெக்டே. இவர் முன்னாள் மத்திய அமைச்சரும் கூட. சனிக்கிழமையன்று பெங்களூருவில் நடந்த பொதுக்கூட்டமொன்றில் பேசிய இவர் கூறியதாவது
இந்தியாவில் நடந்த சுதந்திரப்போராட்டம் என்பதே ஒரு நாடகம்; அது முழுக்க பிரிட்டிஷாரின் அனுமதியுடனும் ஆதரவுடனும் நடந்த ஒன்று.
மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் மற்றும் உணாவிரதம் ஆகியவை நாடகம். இதுபோன்ற நபர்களை எப்படி இந்தியாவில் மகாத்மா என அழைக்கிறார்கள்?
இந்தியாவில் அவ்வாறு அழைக்கப்படும் பெரிய தலைவர்கள் எவரும் ஒருமுறை கூட பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் போலீசாரால் தாக்கப்பட்டதில்லை. இது ஒரு நேர்மையான போராட்டம் இல்லை
பிரிட்டிஷ்காரர்கள் விரக்தியால்தான் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கினார்கள். இதுகுறித்த வரலாற்றைப் படிக்கும்போது எனக்கு ரத்தம் கொதிக்கிறது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இவ்வாறு அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கிக் கொள்வதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...