குர்கான்: கடந்த 2018ம் ஆண்டு நீதிபதியின் மனைவி மற்றும் மகனை சுட்டுக் கொன்ற காவலருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹரியாணா மாநிலம் குர்கானில், கூடுதல் அமர்வு நீதிபதி (ஏஎஸ்ஜே) கிரிஷண் காந்த்தின் மனைவி ரித்து (38), மகன் துருவ் (18) ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி அர்காடியா ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் அவர்களுக்கு பாதுகாப்புக்காகச் சென்ற காவலர் மஹிபால் சிங்கால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில், குற்றவாளி மஹிபால் சிங்குக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி சுதிர் பர்மர் நேற்று தீர்ப்பளித்தார்.
நீதிபதி அளித்த தீரப்பில், பட்டப்பகலில், பாதுகாப்புக்காகச் சென்ற காவலரே, நீதிபதியின் மனைவி மற்றும் மகனை சுட்டுக் கொன்றிருப்பது மிகவும் அரிதிலும் அரிதான சம்பவம். அரசு ஊழியராக, அவர்களைப் பாதுகாப்பது காவலரின் கடமை. ஆனால், அதற்கு மாறாக, நம்பிக்கையை தகர்த்து, அவர்களை சுட்டுக் கொன்றுள்ளார் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, அரசு தரப்பு வழக்குரைஞர், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார். அதே சமயம், குற்றவாளி மஹிபால் தரப்பில் வாதாடிய வழக்குரைஞர், அவரது வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் மஹிபால். அவரை நம்பியே வயதான பெற்றோர், மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள நீதிபதி மறுத்துவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

என்எஸ்டிஎல் 4வது காலாண்டு நிகர லாபம் 8.4% உயர்வு!

பாட்டியாலா சரக்கு ரயில் பாதை வெடி வைத்து தகர்க்க முயற்சி: மேலும் ஒருவர் கைது

ஸ்வாகதா தன் போராட்டத்தில் வெல்லட்டும்: ஜேம்ஸ் வசந்தன்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


