நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்வது குறித்து நாளைக்குள் பரிந்துரைகளை வழங்க அமைச்சர் வலியுறுத்தல்

நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து நாளைக்குள் பரிந்துரைகளை வழங்க தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட அமைப்புகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வலியுறுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து நாளைக்குள் பரிந்துரைகளை வழங்க தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட அமைப்புகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தொடர்ந்து கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேர்வுகளை  செய்வது குறித்து தேசிய தேர்வு முகமை மற்றும் நிபுணர் குழுக்களிடம் மனிதவள மேம்பாட்டுத்துறை பரிந்துரைகளை கேட்டுள்ளது. 

தொடர்ந்து, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து நாளைக்குள் பரிந்துரை வழங்குமாறு டி.ஜி., தேசிய தேர்வு முகமை அடங்கிய குழு மற்றும் நிபுணர்களிடம் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்து முடிவுகளை எடுக்குமாறும் அவர் கூறியுள்ளார். 

முன்னதாக, நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஜூளை 18 முதல் 23 வரையிலும் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com