மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கேரளத்தில் புதிதாக 927 பேருக்கு கரோனா

​கேரளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 927 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
​கேரளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 927 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
Updated On :26 ஜூலை 2020, 2:40 pm

DIN


கேரளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 927 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதித்தோர், குணமடைந்தோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய தகவலை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார். இதன்படி, அங்கு புதிதாக 927 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். 

இன்றைக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 76 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 91 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 67 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் 20,626 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  

இன்றைய நிலவரப்படி கேரளத்தில் மொத்தம் 9,655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9,302 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 61 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.