மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தில்லியில் புதிதாக 1,056 பேருக்கு கரோனா

​தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 1,056 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
​தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 1,056 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On :28 ஜூலை 2020, 1:01 pm

DIN


தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 1,056 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 1,056 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 28 பேர் பலியாகியுள்ளனர். 1,135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,32,275 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,17,507 பேர் குணமடைந்துள்ளனர். 3,881 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 10,887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இன்று மட்டும் 18,544 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 9,76,827 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.