மேற்கு வங்கத்தில் ஆக. 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு; வாரத்தில் இரு நாள்கள் முழு பொதுமுடக்கம்

மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், அதே நேரத்தில் வாரத்தில் இரு நாள்கள் முழு பொதுமுடக்கம் இருக்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், அதே நேரத்தில் வாரத்தில் இரு நாள்கள் முழு பொதுமுடக்கம் இருக்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

மேற்கு வங்கத்தில் வருகிற ஜூலை 31 ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதேநேரத்தில் வாரத்தில் இரு நாள்கள் மட்டும் முழு பொதுமுடக்கம் என்ற தற்போதைய நடைமுறை தொடரும் எனவும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

மேலும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அன்று பொதுமுடக்கம் இருக்காது என்று கூறிய அவர், 'பள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை திறக்கப்படாது. சூழ்நிலையைப் பொறுத்து செப்டம்பர் 5 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்யப்படும்' என்றார். 

அறிவிப்பின்படி, மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 2, 5, 8, 9, 16, 17, 22, 23, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முழு பொது முடக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாள்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது முடக்கம் அமலில் இருக்கும். 

மேலும், அத்தியாவசியத் தேவைகள் தவிர, மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் அலுவலங்கள் இயங்காது. அரசு மற்றும் தனியார் போக்குவரத்துக்கான தடை தொடரும். உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்குகள் திறந்திருக்கும். நீதிமன்றம் செயல்படும். விவசாயம் சார்ந்த பணிகள், மாநிலம்/ மாவட்டங்களுக்கு இடையே அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லுதல், ஆன்லைன் உணவு டெலிவரி ஆகியவைகளுக்கு வழக்கம்போல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com