பாகிஸ்தானில் 1000-க்கும் கீழ் குறைந்த ஒருநாள் பாதிப்பு
பாகிஸ்தானில் புதிதாக 936 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


பாகிஸ்தானில் புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளானோர் குறித்த விவரங்களை அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 936 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,74,908 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 23 பேர் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,865 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 2,42,436 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 1,229 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
மொத்த பாதிப்பில் சிந்து மாகாணத்தில் - 1,18,824, பஞ்சாப் - 92,279, கைபர்-பக்துன்க்வா- 33,510, இஸ்லாமாபாத் - 14,938, பலுசிஸ்தான்- 11,624, கில்கித்-பல்திஸ்தான்- 2,010 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 19,610 உள்பட இதுவரை 19,09,846 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களில் முதல்முறையாக ஒருநாள் பாதிப்பு 1000-க்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்றைய தினம் பரிசோதனை எண்ணிக்கை குறைந்துள்ளதே பாதிப்பு குறைந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...