கரோனா தீநுண்மி: இதே நிலை நீடித்தால் ஜூலையில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பிவிடும்

கரோனா தொற்றுப் பரவல் தற்போதிருக்கும் நிலைலேயே நீடித்தால், கரோனா பாதித்து தீவிர சிகிச்சை தேவைப்படுவோரால், நாட்டில் உள்ள அனைத்து தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் நிரம்பி விடும் என்று ஆய்வுகள் எச்சரிக்
கரோனா தீநுண்மி: இதே நிலை நீடித்தால் ஜூலையில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பிவிடும்


புது தில்லி: கரோனா தொற்றுப் பரவல் தற்போதிருக்கும் நிலைலேயே நீடித்தால், கரோனா பாதித்து தீவிர சிகிச்சை தேவைப்படுவோரால், நாட்டில் உள்ள அனைத்து தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் நிரம்பி விடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

தற்போது நாடு முழுவதும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 32 ஆயிரம் படுக்கை வசதிகள் கரோனா நோயாளிகளுக்கு என பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள கணித அறிவியல் மையம் மேற்கொண்ட ஆராய்ச்சியில், நாட்டில் தற்போது கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயரும் வேகம் தொடர்ந்து நீடித்தால் ஜூலை இறுதியில் சுமார் 10 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்படும்.

அந்த வகையில், கரோனா நோயாளிகளில் 3 - 4 சதவீதம் பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படுவதாக அரசு அளித்திருக்கும் புள்ளி விவரத்தின் அடிப்படையில் பார்த்தால் ஜூலை 24ம் தேதி வாக்கில், இந்தியாவில் கரோனா பாதித்த 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில் நாட்டில் ஒட்டுமொத்தமாக 32,362 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகள் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், 1,20,104 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளும் 8,91,828 தனிமைப்படுத்தும் படுக்கைகளும் ஒதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

ஒரு பக்கம் பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதும், மறுபக்கம் கரோனா தொற்று நாள்தோறும் கடுமையாக உயர்ந்து வருவதும், ஜூலை மத்தியப் பகுதிலேயே இந்த நிலையை எட்டுவதற்கும் வாய்ப்பிருப்பதாக சென்னை கணித அறிவியல் மையத்தின் பையோபிசிஸ்ட்  சிதாபஹ்ரா சின்ஹா தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி இந்தியாவில் 2,97,535 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1,41,842 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கரோனா பாதிப்புக்கு ஏற்ற வகையில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை அதிகரிப்பது என்பது உடனடியாக நடக்கும் காரியம் அல்ல, அவ்வாறு தீவிர சிகிச்சைப் பரிவுகளை உருவாக்கினாலும், அதற்கேற்ப மருத்துவப் பணியாளர்களை உருவாக்குவது சாத்தியமற்றது.

ஒரு பக்கம் கரோனா நோயாளிகளுக்கு தனிக்கவனம் செலுத்தப்படும் போது, சில மருத்துவமனைகளில் இருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் அனைத்தும் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்படும் போது, அதன் விளைவாக வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படுவோரும் பாதிக்கப்படும் அவசம் நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com