'அதிக இறப்பு விகிதம், குஜராத் மாதிரியை வெளிப்படுத்துகிறது' - ராகுல் காந்தி ட்வீட்

நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில்தான் அதிக பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளதை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 
'அதிக இறப்பு விகிதம், குஜராத் மாதிரியை வெளிப்படுத்துகிறது' - ராகுல் காந்தி ட்வீட்

நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில் அதிக பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது குஜராத் மாதிரியை வெளிப்படுத்துவதாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எதிர்மறையாக அம்மாநில அரசை குற்றஞ்சாட்டியுள்ளார். 

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பதிவான இறப்பு விகித புள்ளி விவரத்தை வெளியிட்டு அதில் குஜராத் மாநிலத்தில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என்று கூறிய அவர், இது 'குஜராத் மாதிரியை வெளிப்படுத்துகிறது' என்று கூறியுள்ளார். 

அதில், குஜராத்- 6.25%, மகாராஷ்டிரா- 3.73%, ராஜஸ்தான்- 2.32%, பஞ்சாப்- 2.17%, புதுச்சேரி- 1.98%, ஜார்க்கண்ட்- 0.5%, சத்தீஸ்கர்- 0.35% என்ற மாநில இறப்பு விகிதங்களை குறிப்பிட்டுள்ளார். 

குஜராத்தில் காரோண பாதிப்பு குறைவாக இருந்த நிலையிலும், பலி எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. 

குஜராத்தில் இதுவரை 24,055 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 1,505 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 16,664 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 5,885 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com