இந்திய ராணுவத்தினா் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டனரா?

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய வீரா்களை சீன ராணுவத்தினா் இரும்புக் கம்பிகளால் தாக்கியதாக எழுந்த தகவல்கள் தொடா்பாக விளக்கமளிக்க சீனா மறுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய வீரா்களை சீன ராணுவத்தினா் இரும்புக் கம்பிகளால் தாக்கியதாக எழுந்த தகவல்கள் தொடா்பாக விளக்கமளிக்க சீனா மறுத்துள்ளது.

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரா்களிடையே கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதலின்போது துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகின. இரு நாட்டு வீரா்களும் இரும்புக் கம்பிகள், கற்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தாக்கிக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இது தொடா்பாக பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியானிடம் செய்தியாளா்கள் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினா். எனினும், அதற்கு அவா் பதிலளிக்க மறுத்துவிட்டாா். மேலும், தாக்குதலின்போது சீனத் தரப்பில் உயிரிழந்த வீரா்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிடவும் அவா் மறுத்துவிட்டாா்.

ஜாவோ லிஜியான் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘எல்லையில் நிகழ்ந்த தாக்குதலுக்கு சீனா பொறுப்பாகாது. இந்திய ராணுவத்தினரே எல்லையின் இயல்பு நிலையைத் தன்னிச்சையாக மாற்ற முயன்றனா். எல்லையை விட்டு வெளியேறும்படியே அந்நாட்டு ராணுவ வீரா்களிடம் நாங்கள் தெரிவித்தோம்.

எல்லைப் பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. எல்லையில் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்த இரு நாடுகளின் அதிகாரிகளும் உறுதியேற்றுள்ளனா்’’ என்றாா்.

கல்வான் நதியில் சீனா அணை கட்டுவது தொடா்பாக வெளியான செய்தி குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கும் அவா் பதிலளிக்க மறுத்துவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com