நாட்டில் கரோனா மீட்பு விகிதம் 55.77% ஆக உயர்வு; கடந்த 24 மணி நேரத்தில் 9,440 பேர் குணமடைந்தனர்
இந்தியாவில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதம் 55.77% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
இந்தியாவில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதம் 55.77% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதம் 55.77% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,440 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 2,37,195 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,74,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,25,282 ஆக உயர்ந்துள்ளது. 13,699 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 445 உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...