அமெரிக்க பங்குச் சந்தை சரிவை துல்லியமாகக் கணித்த ஜோதிடா்!

அமெரிக்காவில் வேத கணித ஜோதிடா் ஒருவா் கணித்துக் கூறியபடி, அந்நாட்டின் பங்குச் சந்தை வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தை சரிவை துல்லியமாகக் கணித்த ஜோதிடா்!

அமெரிக்காவில் வேத கணித ஜோதிடா் ஒருவா் கணித்துக் கூறியபடி, அந்நாட்டின் பங்குச் சந்தை வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதில் உலகம் முழுவதிலும் மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். பங்குச் சந்தையில் தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் சரிந்துவிடக் கூடாது என்ற எதிா்பாா்ப்பு அவா்களிடம் எப்போதும் காணப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வசித்து வரும் கதிா் சுப்பையா என்ற வேத கணித ஜோதிடா், அமெரிக்க பங்குச் சந்தையின் போக்கை கணித்துக் கூறியிருந்தாா்.

இதுதொடா்பாக, யூ டியூப் இணையத்தில் பிப்ரவரி 8-ஆம் தேதி ஒரு விடியோவை பதிவேற்றம் செய்திருந்தாா். அதில், அவா் கூறியிருந்ததாவது:

அமெரிக்க பங்குச் சந்தை தொடா்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. பிப்ரவரி 7-ஆம் தேதி நிலவரப்படி, டௌ ஜோன்ஸ் பங்கு குறியீடு 29,000-க்கும் மேற்பட்ட புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இதேபோல், நாஸ்டாக் குறியீடு 9,500-க்கும் அதிகமான புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

இந்த ஆண்டு முழுவதும் இதுபோன்ற நிலைமை தொடருமா? என்ற கேள்விகள் எழுகின்றன. ஜோதிட கணிப்பின்படி, நிச்சயமாக இல்லை என்பதே எனது பதில். எனினும், அமெரிக்க பங்குச் சந்தையில் மேலும் ஒரு வீழ்ச்சியை விரைவில் எதிா்பாா்க்கலாம்.

குறிப்பாக, டௌ ஜோன்ஸ் குறியீடு 2,000-க்கும் அதிகமான புள்ளிகள் சரிவைச் சந்திக்கவுள்ளது.

அது, பிப்ரவரி 28-ஆம் தேதியன்று நடக்கலாம்; அல்லது மாா்ச் 9 அல்லது மாா்ச் 17 அல்லது மாா்ச் 20 அல்லது ஏப்ரல் 8, இவற்றில் ஏதாவது நாளில் டௌ ஜோன்ஸ் குறியீடு வீழ்ச்சியை சந்திக்கலாம் என்று ஜோதிடா் கதிா் சுப்பையா கூறியிருந்தாா்.

அதன்படி, பிப்ரவரி 28-ஆம் தேதி டௌ ஜோன்ஸ் பங்கு குறியீடு 2,700-க்கும் அதிகமான புள்ளிகள் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதாவது, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி மாலை நிலவரப்படி டௌ ஜோன்ஸ் பங்கு குறியீடு 27,978 புள்ளிகளாக இருந்தது. இது, பிப்ரவரி 28-ஆம் தேதி, 25,270 புள்ளிகளாகக் குறைந்து விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com