பெங்களூருவில் கூகுள் ஊழியருக்கு கரோனா வைரஸ்: அலுவலகம் மூடல்

பெங்களூருவில் செயல்பட்டு வரும் தங்கள் கிளையின் ஊழியருக்கு கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூகுள் உறுதிபடுத்தியுள்ளது. 
பெங்களூருவில் கூகுள் ஊழியருக்கு கரோனா வைரஸ்: அலுவலகம் மூடல்

பெங்களூருவில் செயல்பட்டு வரும் தங்கள் கிளையின் ஊழியருக்கு கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூகுள் உறுதிபடுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

எங்களுடைய பெங்களூரு அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு ஊழியருக்கு கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. எந்தவொரு அறிகுறியும் தெரிய வரும் சில மணி நேரம் முன்பு அவர் எங்கள் பெங்களூரு அலுவலகத்தில் பணியில் இருந்தார். கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட அன்றிலிருந்து அந்த ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளோம். சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com