தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த செவ்வாய்க்கிழமை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 29 ஆக இருந்த நிலையில், மதுரை, ஈரோடு, சென்னை ஆகிய மாவட்டத்தைச் இருந்த தலா இரண்டு பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை இன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக இருந்த நிலையில் புதன்கிழமை ஒரேநாளில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, துபையில் இருந்து திருச்சி வந்த 24 வயதான ஆண் ஒருவருக்கு கரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று புதிதாக 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இதில், மதுரையில் ஏற்கெனவே கரோனாவால் உயிரிழந்த நபரின் மனைவிக்கும், மகனுக்கும் கரோனா கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


