பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

விஷவாயுக் கசிவு: தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு விபத்து குறித்து தில்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

News image
Updated On :7 மே 2020, 10:18 am

DIN

விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயுக் கசிவு விபத்து குறித்து தில்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

விசாகப்பட்டினத்தில் தற்போதைய நிலை குறித்து அவர் அதிகாரிகளுடன் மேற்கொண்ட இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்து கொண்டார். 

Story image

விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு விபத்து:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஆர்.ஆர். வெங்கடாபுரத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இந்த விஷவாயு அங்கு சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு பரவியதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 கிராமத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலை இருக்கும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் மயக்கம், மூச்சுத் திணறல், கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கும் பணியில் தீயணைப்புபடையினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.