மீன்வளத்துறைக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மீன்வளத்துறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்படி, ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
மீன்வளத்துறைக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மீன்வளத்துறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்படி, ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சுய சார்பு திட்டத்தின் மூன்றாம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

மீன்பிடித் தொழில்களை மேம்படுத்த ரூ.11,000 கோடியும், மீன்பிடி துறைமுகம், மீன் விற்பனை, மீன் சந்தைகளை மேம்படுத்த ரூ.9000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடல் மற்றும் மீன்வளம் சார்ந்த அனைத்தும் மேம்படுத்தப்படும். புதிய மீன்பிடி துறைமுகங்கள் கட்டப்படும். 

பிரதமரின் இந்த புதிய மீன்வளத் திட்டத்தால் 55 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். 5 ஆண்டுகளில் கூடுதலாக 70 லட்சம் டன் மீன் உற்பத்திக்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com