விவசாயிகளிடம் இருந்து 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்: நிர்மலா சீதாராமன்

விவசாயிகளிடம் இருந்து 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
விவசாயிகளிடம் இருந்து 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்: நிர்மலா சீதாராமன்

விவசாயிகளிடம் இருந்து 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

சுய சார்பு திட்டத்தின் மூன்றாம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். 

அதன்படி, கால்நடை வளர்ப்புத் துறை குறித்து அவர் கூறியதாவது:

பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னோடி நாடாக உள்ளது. கரும்பு உற்பத்தி மற்றும் மீன் பிடித் தொழிலிலும் இந்தியா முன்னணியில் உள்ளது

ஊரடங்கின் போது பால் தேவை 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்தது. இதை சமன் செய்ய 560 லட்சம் லிட்டர் பால் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, மேலும் ரூ.4,100 கோடி ரூபாயில் 111 கோடி லிட்டர் கொள்முதல் செய்ய உத்தி அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று, 2020-21 ஆம் ஆண்டில் பால் உற்பத்திப் பொருள்களுக்கு 2% வட்டி மானியம் வழங்கப்படும். மேலும், உடனடியாக பணம் செலுத்துதல் மற்றும் வட்டி சேவைக்கு மேலும் 2% வட்டி மானியம் வழங்கப்படும். 

இது சுமார் 2 கோடி விவசாயிகளுக்கு பலனளிக்கும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com