காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

லடாக்: 16,000 அடி உயரத்தில் உறையும் பனியில் வீரருக்கு அறுவை சிகிச்சை

கிழக்கு லடாக் பகுதியில் தரையிலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில், உறையும் பனியில், ராணுவ வீரர் ஒருவருக்கு ஏற்பட்ட குடல்வால் பிரச்னையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்

News image

லடாக்: 16,000 அடி உயரத்தில் உறையும் பனியில் வீரருக்கு அறுவை சிகிச்சை

Updated On :2 நவம்பர் 2020, 9:26 am

DIN


கிழக்கு லடாக் பகுதியில் தரையிலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில், உறையும் பனியில், ராணுவ வீரர் ஒருவருக்கு ஏற்பட்ட குடல்வால் பிரச்னையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கிழக்கு லடாக்கில் பாதுகாப்புப் பணியில் இருந்த வீரருக்கு, குடல்வால் பிரச்னை ஏற்பட்ட போது, மோசமான வானிலை காரணமாக அவரை உடனடியாக லேஹ் பகுதிக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

நிலைமையை உணர்ந்த ராணுவ மருத்துவர்கள், உடனடியாக ராணுவத்தின் அறுவை சிகிச்சை மையத்தில் தரைமட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில், உறையும் பனியில், ராணுவ வீரருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டிருந்த குடல்வாலை அகற்றி, சிகிச்சை அளித்தனர்.

தற்போது அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட வீரரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

நாட்டின் எல்லைப் பகுதியில் மிகவும் மோசமான தட்பவெப்பநிலையில், ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவின் போது, அவர்களை வேறு இடத்துக்குக் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு மோசமான வானிலையின் போது, இந்திய ராணுவத்தின் மருத்துவர்கள் மேற்கொண்ட மிக சிக்கலான அறுவை சிகிச்சைகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.