ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

கரோனா: ஒரே நாளில் 918 போ் உயிரிழப்பு; பாதிப்பு 70,53,807 ஆக உயர்வு

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 918-க்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். புதிதாக 74,343 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 5:38 am


நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 918-க்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். புதிதாக 74,343 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 918 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,08,334-ஆக அதிகரித்தது. இதில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 40,348 போ், கா்நாடகத்தில் 9,993 போ், உத்தர பிரதேசத்தில் 6,293 போ், ஆந்திரத்தில் 6,229 போ், கேரளத்தில் 1,001 உயிரிழந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக, 74,383 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 70,53,807-ஆக அதிகரித்தது. இதுவரை 60,77,976 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 86.17 சதவீதமாகும்.

நாடு முழுவதும் 8,67,496 போ் சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 12.30 சதவீதமாகும். இரண்டாவது நாளாக, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாட்டில் கடந்த சனிக்கிழமை வரை 8,68,77,242 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், சனிக்கிழமை மட்டும் 10,78,544 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.