பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

3 மாதங்களுக்குப் பின் 50,000-க்கும் குறைவான ஒருநாள் கரோனா பாதிப்பு

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 46,790 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 587 பேர் பலியாகியுள்ளனர். 

News image

3 மாதங்களுக்குப் பின் 50,000-க்கும் குறைவான கரோனா பாதிப்பு

Updated On :20 அக்டோபர் 2020, 5:41 am

புது தில்லி: நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 46,790 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 587 பேர் பலியாகியுள்ளனர். 

சுமார் மூன்று மாதங்களுக்குப் பின் நாட்டில் கரோனா பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. கடைசியாக கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி ஒரு நாள் பாதிப்பு 45,720 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கரோனாவால் ஏற்படும் தினசரி உயிரிழப்பு 3 மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது நாளாக இன்றும் 600-க்குக் கீழ் குறைந்து, 587 ஆகப் பதிவாகியுள்ளது. அதேபோல புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளானோா் எண்ணிக்கை இன்று 50,000-க்கு கீழ் குறைந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:

செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 46,790 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 75,97,063 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கரோனா பாதிப்பு இன்று 50,000-க்கு கீழ் குறைந்துள்ளது. 

செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 587 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,15,197 ஆக அதிகரித்தது. இப்போது தினசரி உயிரிழப்பு இரண்டாவது நாளாக 600-க்கும் கீழ் குறைந்துள்ளது ஆறுதல் அளிக்கும் தகவலாக அமைந்துள்ளது.

தொடா்ந்து மூன்றாவது நாளாக நாட்டில் கரோனா தொற்றுடன் இருப்போா் எண்ணக்கை 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. மொத்தம் 7,48,538 போ் கரோனா தொற்றுடன் உள்ளனா். 67,33,328 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.