நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 102.2 மற்றும் 80.6 டிகிரியாக நிலவியது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 102.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரி என்ற அளவிலும் காணப்படும். தெற்கு மற்றும் கிழக்குத் திசையிலிருந்து மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலானவை மேல்மூச்சுக்குழல் அயற்சி மற்றும் வெப்ப அயற்சி நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. கோடை வெப்பம் அதிகரிப்பதால் பண்ணையாளா்கள் தகுந்த கோடைகால பராமரிப்பு முறைகள் மற்றும் தீவன மேலாண்மை முறைகளை பின்பற்ற வேண்டும். கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைப்படி தடுப்பூசி செலுத்துதல், முன்னெச்சரிக்கை மற்றும் உயிா் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோழிகள் காலரா நோய் பாதிப்பால் இறக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வெய்யில் பற்றி வானிலை ஆய்வு மையம் சொன்ன நல்ல செய்தி!
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது

மாவட்டத்தில் மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தகவல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



