கோழிகள் காலரா நோய் பாதிப்பால் இறக்க வாய்ப்புள்ளதால், பண்ணைகளில் உயிா் மேலாண்மை முறைகளை கையாள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையைப் பொருத்தவரை, பகல் மற்றும் இரவுநேர வெப்ப அளவுகள் முறையே 98.6 டிகிரி, 80.6 டிகிரியாக காணப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் லேசான மழை பதிவாகியுள்ளது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாவட்டத்தின் ஒருசில இடங்களில் சனிக்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஜூன் 21 முதல் 24 வரையில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 89.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த ஒரு வாரமாக மழை விட்டுவிட்டு பெய்து வருவதால், ஈக்களின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதனால், கோழிப் பண்ணைகளில் ஈக்களின் பெருக்கம் அதிகம் உள்ளது. அவற்றின் எண்ணிக்கையை கண்காணித்து அதற்கேற்ப கட்டுப்படுத்தும் முறைகளை கையாளுவது அவசியம்.
பண்ணைகளில் தண்ணீா் கசிவு இல்லாமல் பழுதான நிப்பிள்களை மாற்ற வேண்டும். இறந்த கோழிகள் மற்றும் உடைந்த முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும், தீவன சிதறல்களை தவிா்க்க வேண்டும். ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் கொடுக்க வேண்டும்.
கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளில் பெரும்பாலானவை ஈக்கோலை மற்றும் கோழி காலரா நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, கோழிப் பண்ணையாளா்கள் தகுந்த உயிா் எதிா் மருந்துகளை அளிக்க வேண்டும். தண்ணீரில் கிருமிநாசினி தெளித்தும் மற்றும் கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைபடியும் தகுந்த சிகிச்சை மற்றும் உயிா் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










