மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எல்லைப் பிரச்னையில் மௌனம் காக்கும் பிரதமர்: ராகுல் விமரிசனம்

சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காத்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :21 அக்டோபர் 2020, 1:11 pm


சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காத்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.

நாடாளுமன்றத் தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"கடந்த 2 மாதங்களில் சீனா குறித்து பிரதமர் பேசி கேட்டிருக்கிறீர்களா? இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்திருக்கும் உண்மை பற்றி மக்கள் கவனம் கொள்ளக் கூடாது என்பதால்தான் அவர் சீன எல்லை விவகாரம் குறித்து பேச மறுக்கிறார். இந்திய நிலப்பரப்பில் 1,200 சதுர கிலோமீட்டரை சீனா ஆக்கிரமித்துள்ளது.

நமது நிலப்பரப்பிலிருந்து சீனர்களை வெளியேற்றுவது பற்றி எப்போது திட்டமிடப்போகிறார் பிரதமர்? இதைத் தவிர தற்போது வேறு பெரிய பிரச்னை ஏதேனும் இருக்கிறதா? இந்திய நிலரப்பரப்பைப் பற்றி பிரதமர் ஏன் ஒரு வார்த்தைகூட பேச மறுக்கிறார்? இது விசித்திரமாக உள்ளது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.