மும்பையில் ரயில் மோதுவதில் இருந்து முதியவர் ஒருவரை அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர் காப்பாற்றினார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள தாஹிசர் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் நேற்று ரயில்வே தண்டவாளம் வழியாக அடுத்த நடைமேடைக்கு செல்ல முயன்றார்.
அப்போது ரயில்வே தண்டவாளத்தில் அவர் தனது காலணியை திடீரென தவறவிட்டுவிட்டார். ஆனால், முதியவர் காலணியை எடுத்து வருவதற்குள் புறநகர் ரயில் வந்துவிட்டது.
உடனடியாக முதியவரின் கையைப் பிடித்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் நடைமேடை இருக்கும் பகுதியை நோக்கி தூக்கிவிட்டார். இதனால் ரயில் மோதுவதில் இருந்து அந்த முதியவர் நூலிழையில் தப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









