மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தில்லியில் கடும் குளிர்: மனவுறுதியுடன் போராட்டத்தைத் தொடரும் விவசாயிகள்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லி எல்லைகளில் கடும் குளிருக்கு மத்தியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
Updated On :3 ஜனவரி 2021, 10:57 am IST

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லி எல்லைகளில் கடும் குளிருக்கு மத்தியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த சுற்று பேச்சில் எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில், குடியரசு தின விழா கொண்டாடப்படும் ஜனவரி 26-ஆம் தேதி, தலைநகா் தில்லியை நோக்கி டிராக்டா் பேரணி நடத்துவோம் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மததிய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட எல்லைகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த 38-நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட 6 பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு முழு உடன்பாடு தெரிவிக்காததால், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதனிடையே நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில், குடியரசு தின விழாவில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும், ஜனவரி 23-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ஆளுநர்களின் குடியிருப்புகளை நோக்கி டிராக்டர் அணிவகுப்பு மேற்கொள்ள உள்ளதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தில்லியில் பகல் 3 மணியளவிலேயே 3 டிகிரிக்கும் கீழான வெப்பநிலையுள்ளதால், அதிகாலை கடும் குளிரில் விவசாயிகள் போர்வைகளை போர்த்தி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்கள்  தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.