தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

உயரிய நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்திய-அமெரிக்கர்

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற இணை நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி வழக்குரைஞரான விஜய் சங்கரை அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

News image

விஜய் சங்கர்​

Updated On :5 ஜனவரி 2021, 4:21 am IST



வாஷிங்டன்: அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற இணை நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி வழக்குரைஞரான விஜய் சங்கரை அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற மேலவை இந்தப் பரிந்துரையை உறுதிப்படுத்தும்பட்சத்தில், தற்போது ஓய்வு பெற்றுள்ள நீதிபதி ஜான் ஆர்.ஃபிஷருக்கு பதிலாக விஜய் சங்கர் நியமிக்கப்பட்டு 15 ஆண்டுகள் பணியாற்றுவார்.

தலைநகர் வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றமானது, மேல்முறையீடுகளை விசாரிக்கும் உயர்நீதிமன்றம் என்றபோதிலும், அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அடுத்தபடியான முக்கியத்துவம் அதற்கு உள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற கீழவை, அமெரிக்க அரசுத் துறைகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்துக்கு உள்ளது. 

இந்த நீதிமன்றத்துக்கு நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள விஜய் சங்கர் தற்போது அமெரிக்க நீதித்துறையின் குற்றவியல் பிரிவில் மூத்த வழக்குரைஞராகவும், மேல்முறையீட்டுப் பிரிவில் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். 2012-இல் அவர் நீதித்துறையில் இணைவதற்கு முன்னர் தனியாக வழக்குரைஞர் பணியில் ஈடுபட்டிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.